திருவாரூர்: லாரி மோதி வீரன் கோவில் சேதம் - பக்தர்கள் வேதனை
திருவாரூரில் உப்பு லோடு ஏற்றி வந்த லாரி வீரன் கோவில் மீது மோதியதில் கோவில் முற்றிலும் சேதமடைந்தது.
திருவாரூர்
திருவாரூர் அருகே கூடூர் என்கிற இடத்தில் திருவாரூர் திருத்துறைப்பூண்டி செல்லும் நெடுஞ்சாலையில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கண்ணாயிரமூர்த்தி அய்யனார் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் முன்புறம் நெடுஞ்சாலைக்கு அருகில் அசகண்ட வீரன் சிலையுடன் கூடிய கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் வழிபாடு செய்து செல்வது வழக்கம்.
இந்நிலையில் வேதாரண்யத்திலிருந்து உப்பு லோடு ஏற்றி கொண்டு சென்னை துறைமுகத்துக்கு சென்ற லாரி ஒன்று இன்று அதிகாலை கூடூர் அசகண்ட வீரன் கோவிலின் மீது மோதியது. இதில் கோவில் முற்றிலும் இடிந்து சாமி சிலைகளும் சேதமடைந்தது. இதனால் பக்தர்கள் மிகுந்த வேதனையடைந்தனர்.
தகவல் அறிந்த திருவாரூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
Related Tags :
Next Story