திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவிலில் 2-வது நாளாக நடைபெற்ற தெப்பத்திருவிழா...!


திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவிலில் 2-வது நாளாக நடைபெற்ற தெப்பத்திருவிழா...!
x

திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவிலில் தெப்பத்திருவிழா இன்று 2-வது நாளாக நடைபெற்றது.

திருவாரூர்


தமிழக கோவில்களில் தோன்றி வரலாற்றை கணக்கிட முடியாத மிகவும் தொன்மை வாய்ந்த தலமாக விளங்குவது திருவாரூர் தியாகராஜர் கோவில். சைவ சமயத்தின் பெரிய கோவிலாகும், சப்தவிடங்க தலங்களில் முதன்மையானதாக திகழ்கிறது. இந்த சிறப்புமிக்க கோவிலில் மகாரதம் என்னும் ஆழித்தேரோட்டமும், அதனுடன் 64 தீர்த்த கட்டங்களை கொண்ட பரந்து விரிந்த கமலாலய குளத்தில் தெப்ப உற்சவமும் சிறப்புக்குரியது.

இந்த ஆண்டு கடந்த மார்ச் 15-ந் தேதி ஆழித்தேரோட்ட விழா நடைபெற்றது. இதன தொடர்ச்சியாக கமலாலய குளத்தில் தெப்பத்திருவிழா நேற்று தொடங்கியது. இன்று 2-வது நாளாக தெப்ப உற்சவத்தில் சிறப்பு அலங்காரத்தில் பார்வதி-கல்யாணசுந்தரர் எழுந்தருள தெப்பம் இரவு 8.15 மணிக்கு குளத்தின் கீழ் கரை பகுதியில் புறபட்டு 3 முறை வலம் வந்தது.

வண்ண விளக்குகள் அலங்கரிக்கப்பட்ட தெப்பம் தண்ணீர் மிதந்து வரும் காட்சி காண கண் கொள்ளாதது. இசை நிகழ்ச்சியுடன் விடிய, விடிய நடைபெற்ற தெப்பத்தை காண 4 கரைகளிலும் ஆயிரகணக்கான பக்தர்கள் குவிந்தனர்.


Next Story