கழுவன் திருவிழா


கழுவன் திருவிழா
x

சிங்கம்புணரி அய்யனார் கோவிலில் கழுவன் திருவிழா நடந்தது.

சிவகங்கை

சிங்கம்புணரி,

சிங்கம்புணரியில் சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் வைகாசி திருவிழாவின் முக்கிய நிகழ்வாக வரலாற்று சிறப்புமிக்க கழுவன் திருவிழா நடைபெற்றது. கழுவன் வேடமிட்டு பயமுறுத்தும் கருப்பு திருமேனியுடன் தீப்பந்தங்கள் கைகளில் ஏந்தியவாறு ஓடிவரும் கழுவனை கண்டு இளைஞர்கள் உற்சாகமாக கொண்டாட்டினர். சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட சிங்கம்புணரியில் உள்ள சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் வைகாசி விசாக பிரமோற்சவ விழா நடைபெற்று வருகிறது. கடந்த 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய விழாவில் சாமி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. 5-ம் நாள் திருவிழாவில் திருக்கல்யாணம் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து 6-ம் நாள் திருவிழாவில் கழுவன் திருவிழா நடைபெற்றது. கருப்பு திருமேனியுடன் ஜடாமுடி அணிந்து கோர உருவத்துடன் கழுவன் சேவுகப்பெருமாள் அய்யனார் கோவிலுக்கு கயிற்றால் கட்டி அழைத்து வரப்பட்டார். அங்கு அமர்ந்திருந்த நாட்டார்களிடம் மரியாதை நிமித்தமாக வணங்கி சேவுகப்பெருமாள் சன்னதியில் அவருக்கு திருநீறு, தீர்த்தம், சிவாச்சாரியார்களால் வழங்கப்பட்டு நாட்டார்கள் அவருக்கு வேட்டி, பரிவட்டம் கட்டி மரியாதை செய்தனர். விழா ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் மற்றும் சிங்கம்புணரி நாட்டார்கள், கிராமத்தார்கள், விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.


Next Story