ஆதிரெத்தினேசுவரர் கோவிலில் திருக்கல்யாணம்


ஆதிரெத்தினேசுவரர் கோவிலில் திருக்கல்யாணம்
x
தினத்தந்தி 2 Aug 2022 3:14 PM GMT (Updated: 2022-08-02T20:45:54+05:30)

திருவாடானை சினேகவல்லிஅம்மன் கோவிலில் இன்று சாமி- அம்பாள் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

ராமநாதபுரம்

தொண்டி,

திருவாடானை சினேகவல்லிஅம்மன் கோவிலில் இன்று சாமி- அம்பாள் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

கொடியேற்றம்

திருவாடானையில் தமிழகத்தின் மிகப் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான சினேகவல்லி சமேத ஆதி ரெத்தினேசுவரர் கோவில் உள்ளது.

இந்த கோவிலில் ஆடிப்பூர திருக்கல்யாண திருவிழா கடந்த மாதம் 23-ந் தேதி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று (புதன்கிழமை) காலை 9.45 மணிக்கு மேல் 10.45 மணிக்குள் சாமி-அம்பாள் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது.

ஆடித்தபசு

இதனையொட்டி நேற்று சினேகவல்லிஅம்மன் ஆடித்தபசு கோலத்தில் கோவிலில் இருந்து புறப்பட்டு ரத வீதிகளில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இந்தநிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story