பாசிப்பட்டினம் தர்கா சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றம்


பாசிப்பட்டினம் தர்கா சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றம்
x

பாசிப்பட்டினம் தர்கா சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றம் நடந்தது.

ராமநாதபுரம்

தொண்டி,

பாசிப்பட்டினம் தர்கா சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றம் நடந்தது.

கொடியேற்றம்

திருவாடானை தாலுகா பாசிப்பட்டினத்தில் பிரசித்தி பெற்ற மகான் சர்தார் நைனா முகமது ஒளிவுல்லா தர்கா உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு இந்த தர்காவின் சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதனையொட்டி கலியநகரிகிராமத்தினரின் கொடி ஊர்வலமும், வட்டானம் ஜமாத்தார் மற்றும் கிராமத்தினர், ஸ்தானிகன் வயல், மானவநகரி கிராமத்தினரின் ரத ஊர்வலமும், மருங்கூர், எஸ்.பி.பட்டினம், பாசி பட்டினம் ஜமாத்தார் கிராமத்தினர் சார்பில் கப்பல் விமானம் போன்ற அலங்கார ரதத்துடனும் பாசி பட்டினம் சந்தனக்கூடு மைதானத்தை வந்தடைந்தனர்.

ஊர்வலம்

இவர்களை தர்கா கமிட்டியினர் நாட்டிய குதிரை மேளதாளங்கள் வாணவேடிக்கை முழங்க தர்காவிற்கு அழைத்து வந்தனர். அதன் பின்னர் தர்காவில் மகான் அடக்க ஸ்தலத்தில் கொடி வைக்கப்பட்டு சிறப்பு பிரார்த்தனை மற்றும் பாத்தியா ஓதும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து கொடியை பொதுமக்கள் ஊர்வலமாக கொடி மரத்திற்கு எடுத்துச் சென்றனர்.

அங்கு மவுலீது ஓதி பாசி பட்டினம் வன்னியர் படையாட்சி சமூகத்தினருடன் கொடியேற்றம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதில் திருவாடானை தாசில்தார் செந்தில் வேல்முருகன், போலீஸ் துணை சூப்பிரண்டு நிரேஷ், தொண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், விழா கமிட்டியை சேர்ந்த அமீர்கான், சேகனாதுரை, முஸ்தபா கமல், அபூபக்கர், காமீது மைதீன், கலியநகரி ஊராட்சி தலைவர் உம்மு சலீமா நூருல் அமீன், வருவாய்த்துறை, காவல்துறையினர் மகான் வாரிசுதாரர்கள் தர்கா கமிட்டியினர் கலந்துகொண்டனர்.

ஏற்பாடு

வருகிற 12-ந் தேதி கத்தம் தமாம், மவ்லிது ஓதி நெய் சாதம் வழங்கும் நிகழ்ச்சியும், 13-ந் தேதி இரவு மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழாவும் நடக்கிறது. 28-ந் தேதியன்று கொடி இறக்கமும் நடைபெறுகிறது. இதனையொட்டி அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் பல்வேறு முக்கிய நகரங் களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஒலியுல்லா பேரர்கள் விழா கமிட்டியாளர்கள் செய்து வருகின்றனர்.


Next Story