ஆறுமுகநேரி கோவிலில் திருவிளக்கு பூஜை


ஆறுமுகநேரி கோவிலில் திருவிளக்கு பூஜை
x
தினத்தந்தி 13 Oct 2023 12:15 AM IST (Updated: 13 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஆறுமுகநேரி கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.

தூத்துக்குடி

ஆறுமுகநேரி:

ஆறுமுகநேரி காந்திதெரு கிழக்கத்தி முத்து சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா கடந்த மாதம் நடைபெற்றது. தொடர்ந்து 48 நாட்கள் மண்ட பூஜை நடைபெற்று, கடந்த 8-ந்தேதி மண்டல பூஜை நிறைவு நாளில் ஹோமங்கள், யாக பூஜைகள் மற்றும் சிறப்பு ஆலங்கார தீபாரதனைகள் நடைபெற்றன.

பின்னர் கோவில் கொடைவிழாவை முன்னிட்டு நடுத்தெரு பிரம்மசக்தி அம்மன் கோவிலில் குடியழைப்பு பூஜை மற்றும் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பெண் பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். ஆத்தூர் அருகிலுள்ள தாமிரபணி ஆற்றிலிருந்து புனித நீர் எடுத்து வருதல் நடந்தது. மதியக் கொடை விழாவினை முன்னிட்டு அலங்கார தீபாரதனைகளும் நடைபெற்றன.

பின்னர் நள்ளிரவில் சாமக் கொடை விழா நடைபெற்றது. நேற்றுமுன்தினம் மஞ்சள் நீராடுதல் மற்றும் படைப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story