பராசக்தி மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை


பராசக்தி மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
x

பராசக்தி மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

விருதுநகர்

தாயில்பட்டி,

ஏழாயிரம்பண்ணையில் நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட பராசக்தி மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் 6-ம் நாள் திருவிழாவினை முன்னிட்டு கோயம்புத்தூர் ஜி. கே. குரூப்ஸ், ஏழாயிரம்பண்ணை பராசக்தி மாதர் சங்கம் சார்பில் கோவில் வளாகத்தில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. திருவிளக்கு பூஜையில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்ட பெண்கள் அனைவருக்கும் ஜி.கே. குரூப்ஸ் உரிமையாளர் காளியப்பன் பரிசுகள் வழங்கினார். பராசக்தி மாதர் சங்கத் தலைவர் கலாவதி முன்னிலை வகித்தார். விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் ஜி.கே.குரூப் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.


Next Story