திருவிளக்கு பூஜை
வாழவந்தான் அம்மன் கோவில் முளைப்பாரி திருவிழாவையொட்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
ராமநாதபுரம்
முதுகுளத்தூர்,
முதுகுளத்தூர் அருகே உள்ள வெங்கல குறிச்சி கிராமத்தில் வாழவந்தான் அம்மன் கோவில் முளைப்பாரி திருவிழாவையொட்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது. கடந்த வாரம் காப்பு கட்டுதளுடன் தொடங்கியது. அம்மனுக்கு 21 வகையான திரவியங்களால் அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பின் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் முதுகுளத்தூர் மற்றும் சுற்றுவட்டார பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பெண்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.
Related Tags :
Next Story