தூத்துக்குடி: பாஜக நிர்வாகி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை..!


தூத்துக்குடி: பாஜக நிர்வாகி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை..!
x

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பாஜக நிர்வாகி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.

கோவில்பட்டி,

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ராஜீவ் நகர் 6-வது தெருவை சேர்ந்தவர் சிவந்திநாராயணன். இவர் பா.ஜனதா பட்டியலின மாநில பொதுச்செயலாளராக இருந்து வருகிறார்.

இந்நிலையில் இன்று காலை கோவில்பட்டியில் உள்ள சிவந்திநாராயணன் வீட்டிற்கு சென்னையில் இருந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் 5 பேர் கார் மூலம் வந்தனர். தொடர்ந்து அவர்கள் வீட்டில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றன. 7 மணிக்கு தொடங்கிய சோதனை 11 மணியை தாண்டியும் நடைபெற்று வருகிறது. இதையொட்டி அவரது வீட்டு முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த சோதனைக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை. சோதனை நடந்து வரும் நிலையில் பா.ஜனதா பட்டியலின மாநில பொதுச்செயலாளர் சிவந்திநாராயணன் வீட்டில் இல்லை என கூறப்படுகிறது.

1 More update

Next Story