மகளிர் உரிமைத்தொகை கிடைக்காதவர்கள் கோட்டாட்சியரிடம் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் அறிவிப்பு
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் ஏற்கப்படாத விண்ணப்பதாரர்கள் குறுஞ்செய்தி பெறப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் இ-சேவை மையம் வழியாக சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியரிடம் மேல்முறையீடு செய்யலாம். என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் ஏற்கப்படாத விண்ணப்பதாரர்கள் குறுஞ்செய்தி பெறப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் இ-சேவை மையம் வழியாக சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியரிடம் மேல்முறையீடு செய்யலாம். என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
மகளிர் உரிமை தொகை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜீத் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பதாரர்களின் விண்ணப்ப முடிவு நிலை குறித்த குறுஞ்செய்தி விண்ணப்பதாரர்களின் பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்ணிற்கு இன்று(திங்கட்கிழமை) முதல் அனுப்பி வைக்கப்படும். இதில் ஏற்கப்படாத விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடு செய்ய விரும்பினால் குறுஞ்செய்தி பெறப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் இ-சேவை மையம் வழியாக சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியரிடம் மேல்முறையீடு செய்யலாம்.
விழிப்புணர்வு
மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் 30 நாட்களுக்குள் தீர்வு செய்யப்படும். மேலும் பயனாளிகளின் கைப்பேசி எண்ணிற்கு வங்கியிலிருந்தோ அல்லது ஏதேனும் வங்கி சார்ந்த நிறுவனத்திலிருந்தோ அழைக்கிறோம் என அழைப்பு வந்து ஏதேனும் கடவுச்சொல் அல்லது ஏ.டி.எம். கார்டின் பின்பக்கத்தில் உள்ள மூன்று இலக்க எண்களையோ தெரிவிக்கக் கோரி யாரேனும் கேட்டால், அவர்களுக்கு தெரிவிக்க வேண்டாம் எனவும், இவ்வாறான விவரங்களை தெரிவித்தால் உங்களுடைய வங்கி கணக்கிலிருந்து மேற்கண்ட தொகை திருடப்படவும் வாய்ப்புள்ளது. எனவே, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகள் விழிப்புணர்வுடன் இருந்து பயன்பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.