கன்னியாகுமரி மாவட்டத்தில் நிவாரண தொகை பெறாதவர்கள் இன்று பெற்றுக் கொள்ளலாம் - கலெக்டர் அறிவிப்பு


கன்னியாகுமரி மாவட்டத்தில் நிவாரண தொகை பெறாதவர்கள் இன்று பெற்றுக் கொள்ளலாம்  - கலெக்டர் அறிவிப்பு
x
தினத்தந்தி 3 Jan 2024 3:42 AM GMT (Updated: 3 Jan 2024 5:08 AM GMT)

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தலா ரூ.1,000 வெள்ள நிவாரணத்தொகை வழங்கப்பட்டது

கன்னியாகுமரி,

வெள்ளத்தால் மிக கடுமையாக பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி மாவட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணமாக தலா ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என்றும் கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.1,000 வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தலா ரூ.1,000 வெள்ள நிவாரணத்தொகை வழங்கப்பட்டது. இன்னும் பலர் இந்த நிவாரணத்தொகையை வாங்கவில்லை.

இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுவரை வெள்ள நிவாரண நிதி ரூ.1,000 வாங்காத அல்லது விடுபட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு இன்று வழங்கப்படும் என மாவட்ட கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் அறிவித்துள்ளார்.


Next Story