மகளிர் மேன்மைக்காக சேவை புரிந்தவர்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம்


மகளிர் மேன்மைக்காக சேவை புரிந்தவர்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம்
x

மகளிர் மேன்மைக்காக சேவை புரிந்தவர்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர்

பெண்கள் மேன்மைக்காக சிறப்பாக சமூக சேவைபுரிந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனத்துக்கான விருதுகள் தமிழக முதல்-அமைச்சரால் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது. சிறந்த சமூக சேவகருக்கு 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கமும், சான்றிதழும், சிறந்த நிறுவனத்துக்கு ரூ.50 ஆயிரம் ரொக்கப் பரிசுடன், 10 கிராம் தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். இவ்விருதுக்கு தகுதியுடையவர் தமிழ்நாட்டை பிறப்பிடமாகவும், 18 வயதுக்கு மேற்பட்டவராகவும் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பெண்களை சார்ந்த நடவடிக்கைகள், பெண் குலத்துக்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை, மொழி, இனம், பண்பாடு, கலை அறிவியல், நிர்வாகம் உள்ளிட்ட துறைகளில் மென்மையாக பணிபுரிந்து, மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றும் சமூக சேவகர் மற்றும் சமூக தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம். சமூக சேவை நிறுவனம் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனமாக இருக்க வேண்டும். தகுதியானவர்கள் தமிழக அரசின் விருதுகள் பெற https://awards.tn.gov.in என்னும் இணையதளத்தில் ஜூன் 10-ந்தேதி மாலைக்குள் ஆன்லைனில் பதிவுசெய்து, அதன் விவரத்தை பெரம்பலூர் மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், பெரம்பலூர் என்னும் முகவரியில் உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.


Next Story