அதிமுக கூட்டணியை விட்டு சென்றவர்கள் செல்லாத காசு - பொள்ளாச்சி ஜெயராமன்


அதிமுக கூட்டணியை விட்டு சென்றவர்கள் செல்லாத காசு - பொள்ளாச்சி ஜெயராமன்
x

அதிமுக கூட்டணியில் அங்கம் வகிப்பவர்கள் டாலருக்கு நிகரானவர்கள் என்று பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

கோவை,

அதிமுக முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் கோவையில் பேசியதாவது:-

கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியது போல அதிமுகவில் 1.5 கோடி உறுப்பினர்கள் என்பதை 2.5 கோடியாக உயர்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மதுரை மாநாடு வெற்றிகரமாக நடத்தப்பட்டது. விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ளது. அதோடு சட்டப்பேரவை தேர்தல் வரக்கூடும் அதற்கும் தொண்டர்கள் தயாராக இருக்க வேண்டும்.

அதிமுக கூட்டணியை விட்டு சென்றவர்கள் கிழிந்து, இத்துப்போன செல்லாத காசு. அதிமுக கூட்டணியில் அங்கம் வகிப்பவர்கள் டாலருக்கு நிகரானவர்கள். அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தால் அவர்கள் செல்லும் ரூபாய் நோட்டாக இருப்பார்கள்.

யார் எங்களுடைய பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை வருங்கால முதல்-அமைச்சராக ஏற்றுக்கொள்கிறார்களோ அவர்களோடு தான் கூட்டணி வைப்போம். அதிமுகவை எதிர்த்தவர்கள் எதிர்காலம் சூனியமாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story