மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிபவர்கள் விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம்


மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிபவர்கள் விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம்
x

மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிபவர்கள் விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை

மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிபவர்கள் விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

சேவை புரிபவர்கள்

தமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான தொண்டு நிறுவனங்கள் மற்றும் சேவைபுரிபவர்கள் சிறப்பாக சேவைபுரிய வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கத்தோடு அவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின விழாவில் தமிழக முதல்-அமைச்சரால் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது.

இந்த ஆண்டும் வருகிற ஆகஸ்டு மாதம் 15-ந் தேதியன்று நடைபெறவுள்ள சுதந்திர தின விழாவில் தமிழக அளவில் சிறப்பாக சேவைபுரிபவர்கள் மற்றும் நிறுவனங்கள் மாநில அளவிலான தேர்வு குழு மூலம் தேர்வு செய்யப்பட்டு தேர்ந்தெடுக்கப்படும் விருதாளர்களுக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளன.

தங்கப்பதக்கம்

மாற்றுத் திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த தொண்டு நிறுவனத்திற்கு 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம், ரூ.50 ஆயிரம் ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ், மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த டாக்டருக்கு 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ்,

மாற்றுத்திறனாளிகளுக்கு மிக அதிக அளவில் வேலைவாய்ப்பு அளித்த தனியார் நிறுவனத்திற்கு 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ், மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த சமூகப்பணியாளருக்கு 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ், சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது.

26-ந் தேதி கடைசி நாள்

இந்த விருதுகளுக்கான விண்ணப்ப படிவங்களை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் பெற்று பூர்த்தி செய்து உரிய அனைத்து சான்றிதழ்களுடன் வருகிற 26-ந் தேதி (திங்கட்கிழமை) மாலை 5.30 மணிக்குள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடம் நேரிலோ அல்லது தபால் மூலமோ விண்ணப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story