கார்கள் மோதிக்கொண்ட விபத்தில் சிறுமி உள்பட 3 பேர் காயம்


கார்கள் மோதிக்கொண்ட விபத்தில் சிறுமி உள்பட 3 பேர் காயம்
x

கார்கள் மோதிக்கொண்ட விபத்தில் சிறுமி உள்பட 3 பேர் காயம் அடைந்தனர்.

கரூர்

குளித்தலை அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி சாந்தி (வயது 61). குலதெய்வ கோவிலுக்கு செல்வதற்காக சாந்தி, சாந்தியின் மகள் சூர்யா (37), மருமகன் மகாமுனி ராஜா, பேரக்குழந்தைகள் சாய் நவ்யா (6), சாய் ராகவ் மற்றும் அவரது மகன் பாலமுருகன் ஆகியோர் சம்பவத்தன்று காரில் குளித்தலையில் இருந்து சென்று கொண்டிருந்தனர். திருச்சி- கரூர் புறவழி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, அதே சாலையில் எதிரே வந்த கார் தனக்கு முன்னாள் சென்ற வாகனத்தை முந்தி சென்றபோது, சாந்தி உள்ளிட்டோர் சென்ற கார் மீது மோதியது.

இந்த விபத்தில் 2 கார்களின் முன் பகுதி சேதமடைந்தது. மேலும் இந்த கார்களில் வந்தவர்கள் காயமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து குளித்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தவிபத்தில் படுகாயம் அடைந்த சாந்தி மற்றும் அவரது பேரக்குழந்தை சாய் நவ்யா ஆகிய 2 பேர் முதலுதவி சிகிச்சை பெற்று பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில் சூர்யாவிற்கு லேசான காயம் என்பதால் அவர் முதலுதவி சிகிச்சை பெற்றுச் சென்றார். மேலும் மற்றொரு காரில் வந்த நபர்களுக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து சாந்தி ெகாடுத்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story