மோட்டார் சைக்கிள் மீது அரசு விரைவு பஸ் மோதி பெண்கள் உள்பட 3 பேர் பலி


மோட்டார் சைக்கிள் மீது அரசு விரைவு பஸ் மோதி பெண்கள் உள்பட 3 பேர் பலி
x

திருவண்ணாமலை அருகே வெறையூரில் மோட்டார்சைக்கிள் மீது அரசு விரைவு பஸ் மோதியதில் பெண்கள் உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.

திருவண்ணாமலை

வாணாபுரம்

திருவண்ணாமலை அருகே வெறையூரில் மோட்டார்சைக்கிள் மீது அரசு விரைவு பஸ் மோதியதில் பெண்கள் உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.

துக்கம் விசாரிக்க சென்றபோது நடந்த இந்த சோக சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

மோட்டார்சைக்கிளில் சென்றனர்

திருவண்ணாமலை மாவட்டம் வெறையூர் அருகே உள்ள பெரியகல்லப்பாடிபுதூர் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 29). அதே பகுதியை சேர்ந்த துரை மனைவி சித்ரா (24), விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே உள்ள கொடுக்கப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் மனைவி இந்திரா (44) ஆகியோர் இவரது உறவினர்களாவர்.

பெரியகல்லப்பாடியில் உள்ள இவர்களது உறவினர் இறந்ததையொட்டி துக்கம் விசாரிக்க இந்திரா வந்திருந்தார். அவரையும் சித்ராவையும் தனது மோட்டார்சைக்கிளில் ஏற்றிக்கொண்டு பெரியகல்லப்பாடிக்கு விக்னேஷ் புறப்பட்டார்.

வெறையூர் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது வேலூரிலிருந்து திருவனந்தபுரத்துக்கு சென்ற அரசு விரைவு பஸ் இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

3 பேர் சாவு

இதில் இந்திரா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.படுகாயம் அடைந்த சித்ரா, விக்னேஷ் ஆகிய இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் செல்லும் வழியிலேயே அவர்கள் இறந்து விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் வெறையூர் இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

மோட்டார்சைக்கிள் மீது அரசு விரைவு பஸ் மோதியதில் 3 பேர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.Next Story