போலீஸ் தேடிய 3 பேர் கைது


போலீஸ் தேடிய 3 பேர் கைது
x

மன்னார்குடி அருகே பெண்ணிடம் சங்கிலி பறித்த வழக்கில் போலீஸ் தேடிய 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனா்.

திருவாரூர்

மன்னார்குடி;

மன்னார்குடி அருகே பெண்ணிடம் சங்கிலி பறித்த வழக்கில் போலீஸ் தேடிய 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனா்.

சங்கிலி பறிப்பு

மன்னார்குடியை அடுத்த விக்கிரபாண்டியம் அருேக உள்ள ஆலத்தூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் பரசுராமன். இவருடைய மனைவி கபிலா (வயது28). இவர் தஞ்சையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எட் படித்து வருகிறார். கபிலா கூத்தாநல்லூர் அருகே உள்ள சேகரை கிராமத்தில் உள்ள தந்தை வீட்டுக்கு வந்துவிட்டு கடந்த அக்டோபர் மாதம் 26-ந் தேதி காலை மன்னார்குடி வழியாக தஞ்சைக்கு ஸ்கூட்டரில் சென்றார். அப்போது தெற்கு நத்தம் என்ற இடத்தில் கபிலாவை மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து சென்ற மர்ம நபர்கள் அவரை வழிமறித்து அவர் கழுத்தில் இருந்த 7 பவுன் சங்கிலியை பறித்து சென்றனர்.

கைது

இதுகுறித்து மன்னார்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வந்தனர். இந்தநிலையில் போலீசர் நடத்திய விசாரணையில் கபிலாவிடம் சங்கிலியை பறித்து சென்றது பட்டுக்கோட்டையை சேர்ந்த மனோஜ்குமார் (21), காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பகுதியை சேர்ந்த மோகன்ராஜ்(20) என தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 36 கிராம் தங்க நகையை பறிமுதல் செய்தனர்.இந்தநிலையில் இவ்வழக்கில் தொடர்புடைய பட்டுக்கோட்டையை அடுத்த தாமரங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டனையும்(21) போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 12 கிராம் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.


Next Story