3 பேருக்கு ஆயுள் தண்டனை


3 பேருக்கு ஆயுள் தண்டனை
x

வளரும் தமிழகம் கட்சி நிர்வாகி கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தஞ்சை கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

வளரும் தமிழகம் கட்சி நிர்வாகி கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தஞ்சை கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

வளரும் தமிழகம் கட்சி நிர்வாகி

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள ஆரியலூர் கீழத்தெருவை சேர்ந்தவர் ரஜினி பாண்டியன்(வயது 47). இவர் வளரும் தமிழகம் கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளராக பதவி வகித்து வந்தார்.கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் 9-ந் தேதி இரவு தனது மோட்டார் சைக்கிளில் எடையூரில் இருந்து ஆரியலூருக்கு சென்று கொண்டிருந்தார்.

வெட்டிக்கொலை

வடசங்கேந்தி அருகே ரஜினி பாண்டியன் சென்றபோது அவரை ஒரு கும்பல் வழிமறித்து அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடி விட்டது.உயிருக்கு ஆபத்தான நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த ரஜினி பாண்டியனை அப்பகுதி மக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலமாக திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ரஜினி பாண்டியன் பரிதாபமாக உயிரிழந்தார்.

7 பேர் கைது

இந்த கொலை தொடர்பாக எடையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் முன்விரோதம் காரணமாக இந்த கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.இந்த கொலை தொடர்பாக வடசங்கேந்தி பகுதியை சேர்ந்த ராஜேஷ்(27), மகாதேவன்(30), ஆனந்த்(23) உள்பட 7 பேரையும் அப்போதைய துணை போலீஸ் சூப்பிரண்டு வெள்ளத்துரை மற்றும் போலீசார் கைது செய்தனர்.

3 பேருக்கு ஆயுள் தண்டனை

பின்னர் இவர்கள் 7 பேரையும் தஞ்சை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில்(குடியுரிமை பாதுகாப்பு) போலீசார் ஆஜர்படுத்தி வழக்கு தொடர்ந்தனர்.வழக்கை நீதிபதி ரவி விசாரணை செய்து ராஜேஷ், மகாதேவன், ஆனந்த் ஆகிய 3 பேருக்கும் ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் 1 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார்.இந்த வழக்கில் கைதான மற்ற 4 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். அரசு தரப்பில் வக்கீல் அர்ச்சுனன் ஆஜராகி வாதாடினார்.


Next Story