கஞ்சா வேண்டுமா என போலீசாரிடமே கேட்ட இளைஞர்கள் மூவர் அதிரடி கைது


கஞ்சா வேண்டுமா என போலீசாரிடமே கேட்ட இளைஞர்கள் மூவர் அதிரடி கைது
x

கோவையில் ரோந்து போலீசாரிடம் கஞ்சா விற்க முயன்ற இளைஞர்கள் மூன்று பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

கோவை,

கோவை மாவட்டம் சூலூரில், ரோந்து போலீசாரிடம் கஞ்சா விற்க முயன்ற இளைஞர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். சோமனூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட தனிப்படை போலீசாரிடம், கஞ்சா போதையில் இருந்த இளைஞர்கள் மூவர், கஞ்சா வேண்டுமா எனக் கேட்டதாக தெரிகிறது.

அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், ஒடிசாவைச் சேர்ந்த சுமர்நாத் என்பவர் தமிழகத்தைச் சேர்ந்த இருவருடன் இணைந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

அவர்களிடமிருந்து மூன்று கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்த போலீசார், மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story