வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x

நெல்லை அருகே வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

திருநெல்வேலி

நெல்லை அருகே உள்ள மஞ்சங்குளத்தை சேர்ந்தவர் கேத்ரபால். இவருடைய மகன் மணிகண்டன் (வயது 30). இவர் அடிதடி வழக்கில் மூன்றடைப்பு போலீசாரால் கைது செய்யப்ட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இவர் அடிதடி, கொலை முயற்சி மற்றும் திருட்டு வழக்குகளில் தொடர்ந்து ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதால் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். கலெக்டர் கார்த்திகேயன் இந்த பரிந்துரையை ஏற்று மணிகண்டனை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை நாங்குநேரி வட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி நேற்று பாளையங்கோட்டை மத்திய சிறையில் சமர்ப்பித்தார்.


Next Story