வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 25 Aug 2023 12:30 AM IST (Updated: 25 Aug 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

திருக்குறுங்குடியில் வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

திருநெல்வேலி

நாங்குநேரி அருகே உள்ள நம்பிதலைவன் பட்டயம் கிராமத்தை சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவரின் மகன் இசக்கிதுரை (வயது 33). இவர் ஒரு வழக்கில் திருக்குறுங்குடி போலீசாரால் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இவர் அடிதடி மற்றும் வழிப்பறி போன்ற வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதால் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன், மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். கலெக்டர் கார்த்திகேயன் இந்த பரிந்துரையை ஏற்று இசக்கிதுரையை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை ஏர்வாடி வட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மராஜ் நேற்று பாளையங்கோட்டை மத்திய சிறையில் சமர்ப்பித்தார்.


Next Story