வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x

வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

திருச்சி

திருச்சி சங்கிலியாண்டபுரம் வள்ளுவர் நகரை சேர்ந்தவர் ஆறுமுகம் என்ற முத்துவீரன் (வயது 51). புரோட்டா மாஸ்டரான இவரை பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்ற வழக்கில் உறையூர் பாண்டமங்கலத்தை சேர்ந்த மணிகண்டன் (20) கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மணிகண்டன் மீது கத்தியை காட்டி பணம் பறித்த ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது. இவர் ஜாமீனில் வெளியே வந்தால் பொதுமக்களுக்கும், பொது அமைதிக்கும் பாதிப்பு ஏற்படும் என்று பாலக்கரை போலீசார் கொடுத்த அறிக்கையின்பேரில், மணிகண்டனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் காமினி உத்தரவிட்டார்.

1 More update

Next Story