வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 29 Oct 2022 6:45 PM GMT (Updated: 29 Oct 2022 6:45 PM GMT)

நெல்லை அருகே வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

தென்காசி

ஆலங்குளம்:

நெல்லை அருகே உள்ள ராமையன்பட்டி ராஜகோபாலபுரத்தை சேர்ந்தவர் முத்துகுமார் என்ற வீரமுத்து (வயது 24). இவர் சீதபற்பநல்லூர் போலீசாரால் கொலை முயற்சி மற்றும் அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதால் இவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சபாபதி ஆகியோர் கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர். இதை கலெக்டர் விஷ்ணு ஏற்று முத்துகுமாரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதற்கான உத்தரவை பாளையங்கோட்டை சிறை அதிகாரிகளிடம் இன்ஸ்பெக்டர் சபாபதி நேற்று வழங்கினார்.


Next Story