வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x

முக்கூடலில் வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

திருநெல்வேலி

முக்கூடல்:

முக்கூடல் தியாகராஜர் தெருவை சேர்ந்தவர் முத்துவிஜயராஜ் (வயது 33). இவர் முக்கூடல் பகுதியில் அடிதடி மற்றும் கொலை முயற்சியில் ஈடுபட்டதாக முக்கூடல் போலீசார் இவரை கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் இவரால் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் என்பதால் இவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்று நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், இன்ஸ்பெக்டர் ஜென்சி ஆகியோர் கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர். இதை கலெக்டர் விஷ்ணு ஏற்று முத்துவிஜயராஜை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டதற்கான உத்தரவை பாளையங்கோட்டை சிறை அதிகாரிகளிடம் இன்ஸ்பெக்டர் ஜென்சி நேற்று வழங்கினார்.

1 More update

Next Story