வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x

மேலப்பாளையத்தில் வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

திருநெல்வேலி

நெல்லை மேலப்பாளையம் குறிச்சி பகுதியை சேர்ந்தவர் முருகேஷ் குமார் என்ற குறிச்சி குமார் (வயது 36). இவர் மீது மேலப்பாளையம் போலீஸ் நிலையத்தில் அடிதடி வழக்குகள் உள்ளன. இதனால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதால் இவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்று துணை போலீஸ் கமிஷனர் அனிதா, மேலப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் ஆகியோர் மாநகர போலீஸ் கமிஷனருக்கு பரிந்துரை செய்தார்.இதை கமிஷனர் ராஜேந்திரன் ஏற்று குறிச்சி குமாரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து குறிச்சி குமார் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டதற்கான உத்தரவு நகல் பாளையங்கோட்டை சிறை அதிகாரியிடம் வழங்கப்பட்டது.


Next Story