வண்டலூர் உயிரியல் பூங்காவில் புலிக்கு உடல்நிலை பாதிப்பு; தீவிர சிகிச்சை


வண்டலூர் உயிரியல் பூங்காவில் புலிக்கு உடல்நிலை பாதிப்பு; தீவிர சிகிச்சை
x

வண்டலூர் உயிரியல் பூங்காவில் புலி உணவு உட்கொள்ளாமல் அவதிப்பட்டு வருகிறது. பூங்காவின் கால்நடை மருத்துவர்களால், புலியின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிப்பட்டு வருகின்றது.

செங்கல்பட்டு

வண்டலூர்,

வண்டலூர் உயிரியல் பூங்காவில் 2,300 விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இங்கு பராமரிக்கப்பட்டு வரும் நகுலன் (வயது 6), என்ற ஆண் வங்கப்புலி கடந்த ஏப்ரல் மாதம் சரியாக உணவு உண்ணவில்லை. இதனை தொடர்ந்து வழிகாட்டு நெறிமுறையின்படி புலிக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பின்னர் புலி நன்றாக இருந்தது.

பின்னர், ஜூலை மாதம் மீண்டும் சரியாக உணவு உட்கொள்ளவில்லை. இதனை தொடர்ந்து மீண்டும் புலிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. புலியின் உடல்நிலையை மேம்படுத்த மருத்துவ ஆய்வும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. உயிரியல் பூங்காவின் கால்நடை டாக்டர்களால், புலியின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிப்பட்டு வருகின்றது. இவ்வாறு பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.


Next Story