ஆகஸ்ட் மாதத்திற்கான பாமாயில், பருப்பு வாங்க கால அவகாசம்


ஆகஸ்ட் மாதத்திற்கான பாமாயில், பருப்பு வாங்க கால அவகாசம்
x

பாமாயில், துவரம் பருப்பை அடுத்த மாதம் 5-ந்தேதி வரையில் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

ரேசன் கடைகளில் ஆகஸ்ட் மாதத்திற்கான பாமாயில், பருப்பு பெறாதவர்கள் அதனை பெற்றுக்கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூறுகையில், "உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து நியாய விலைக் கடைகளிலும் ஆகஸ்ட் 2024 ஆம் மாதத்திற்கான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் ஒதுக்கீட்டினை பெறாத குடும்ப அட்டைதாரர்கள் பாமாயில், துவரம் பருப்பை அடுத்த மாதம் 5-ந்தேதி வரையில் பெற்றுக்கொள்ளலாம்" என தெரிவித்துள்ளது.

1 More update

Next Story