திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா


திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
x

விக்கிரமங்கலம் அருகே திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள கீழநத்தம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் திருவிழா கடந்த மே மாதம் 6-ந் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது.

இதையடுத்து, கடந்த 25 நாட்களாக இரவு நேரங்களில் கோவிலில் பாரத கதைகள் பாடப்பட்டு வந்தன. அவ்வப்போது சாமி வீதியுலா நிகழ்ச்சியும் நடைபெற்று வந்தன. மேலும் அர்ஜுனன் வில் வளைக்கும் நிகழ்ச்சி மற்றும் அரவான் நிகழ்ச்சி மற்றும் காளியம்மன் நடன நிகழ்ச்சியும் நடைபெற்றன.

விழாவின் சிகர நிகழ்ச்சியான தீ மிதி திருவிழா நேற்று முன்தினம் கீழநத்தம் பெருமாள் குளம் அருகே உள்ள திடலில் நடைபெற்றது. இதில் 40-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்தினர். நேற்று மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது.


Next Story