அரளை கற்களை ஏற்றி சென்ற டிப்பர் லாரி பறிமுதல்


அரளை கற்களை ஏற்றி சென்ற டிப்பர் லாரி பறிமுதல்
x

அரளை கற்களை ஏற்றி சென்ற டிப்பர் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

புதுக்கோட்டை

அன்னவாசல் அருகே உள்ள சித்தன்னவாசல் பகுதியில் டிப்பர் லாரி ஒன்று சென்று கொண்டு இருந்தது. அப்போது அந்த வழியாக சென்ற அன்னவாசல் வருவாய் ஆய்வாளர் லோகு டிப்பர் லாரியை தடுத்து நிறுத்தி ஆய்வு செய்தார். அப்போது அதில் அனுமதியின்றி அரளை கற்கள் ஏற்றி ெசன்றது தெரியவந்தது. இதையடுத்து அந்த டிப்பர் லாரியை பறிமுதல் செய்த அவர் மேல் நடவடிக்கைக்காக அன்னவாசல் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். இந்த சம்பவம் தொடர்பாக அன்னவாசல் போலீசார் லாரி உரிமையாளர் ராஜலெட்சுமி, டிரைவர் செல்வம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story