ஆளவந்தீஸ்வரர் கோவிலில் தீர்த்தவாரி


ஆளவந்தீஸ்வரர் கோவிலில் தீர்த்தவாரி
x

ஆளவந்தீஸ்வரர் கோவிலில் தீர்த்தவாரி நடந்தது.

கரூர்

கிருஷ்ணராயபுரம் அருகே பழைய ஜெயங்கொண்ட சோழபுரத்தில் பழமை வாய்ந்த ஆரணவல்லி சமேத ஆளவந்தீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் மாசி மக திருவிழா கடந்த 2-ந்தேதி தொடங்கியது. தொடர்ந்து தினமும் சிறப்பு அபிஷேகம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வந்தது. நேற்று பஞ்சபூர்த்தி புறப்பாடு நடைபெற்றது. பின்னர் கோவில் திருக்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன.

1 More update

Next Story