வேதாரண்யேஸ்வரர் கோவிலில் தீர்த்தவாரி


வேதாரண்யேஸ்வரர் கோவிலில் தீர்த்தவாரி
x

கந்தசஷ்டி விழாவையொட்டி வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் தீர்த்தவாரி நடந்தது.

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:-

வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்புடையது. இந்த கோவிலில் சுப்பிரமணியசாமி தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த கோவிலில் கந்தசஷ்டி விழா தொடங்கி நடைெபற்று வந்தது. விழா நாட்களில் சாமி காலை, இரவு நேரங்களில்அலங்கரிக்கப்பட்ட கேடயத்தில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்று வந்தது. கடந்த 30-ந்தேதி சூரசம்கார நிகழ்ச்சி நடந்தது. இதனை தொடர்ந்து நேற்று காலை சுப்பிரமணியசாமி புறப்பட்டு சேதுபதி மண்டபத்தில் எழுந்தருளி அஸ்திர தேவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று மணிகர்ணிகை தீர்த்த குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. பின்னர் சாமி வீதி உலா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story