திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் நாளை முதல் பாபநாசம் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும்


திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் நாளை முதல் பாபநாசம் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும்
x

கோப்புப்படம் 

பயணிகளின் வரவேற்பை பொறுத்து நிரந்தர நிறுத்தமாக மாற்றப்படும் என்று ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தஞ்சாவூர்,

சென்னை-திருச்செந்தூர் இடையே இரு மார்க்கத்திலும் தினசரி செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. சென்னையில் இருந்து புறப்படும் ரெயில் கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருச்சி, மதுரை, திருநெல்வேலி வழியாக திருச்செந்தூருக்கும், மறுமார்க்கமாக அங்கிருந்து சென்னைக்கும் இயக்கப்படுகிறது.

இந்த நிலையில் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் நின்று செல்ல வேண்டும் என்று பயணிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். அந்த கோரிக்கையை ஏற்று செந்தூர் எக்ஸ்பிரஸ் இரு மார்க்கத்திலும் பாபநாசத்தில் 1 நிமிடம் மட்டும் தற்காலிகமாக நின்று செல்லும்.

நாளை முதல் இந்த முறை அமலுக்கு வருகிறது. அடுத்த வருடம் ஜூன் மாதம் 3-ந் தேதி வரை இந்த சோதனை முறை அமலில் இருக்கும் என்றும் பயணிகளின் வரவேற்பை பொறுத்து நிரந்தர நிறுத்தமாக மாற்றப்படும் என்று ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Next Story