திருச்செந்தூர் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரியில் ஆசிரியர் தின விழா


திருச்செந்தூர் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரியில் ஆசிரியர் தின விழா
x
தினத்தந்தி 7 Sept 2023 12:15 AM IST (Updated: 7 Sept 2023 11:05 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி

திருச்செந்தூர் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரியில் மாணவ செவிலியர் சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வர் என்.கலைக்குருசெல்வி தலைமை தாங்கினார். 4-ம் ஆண்டு மாணவி பொன்சினேகா வரவேற்று பேசினார்.

விழாவில் சிறப்பு விருந்தினராக தோழப்பன்பண்ணை அரசு மேல்நிலைப் பள்ளி அறிவியல் ஆசிரியர் ஜோசப் வெனிஸ் கலந்து கொண்டு கல்வி மற்றும் பெற்றோரின் முக்கியத்துவம் குறித்தும், வாழ்க்கை வரலாறு பற்றியும், மாணவர்கள் எவ்வாறு ஆசிரியர்களிடம் நடந்து கொள்வது குறித்தும் விளக்கிப் பேசினார். மாணவிகள் கலை நிகழ்ச்சிகள் மூலம் தங்கள் வாழ்த்துக்களை ஆசிரியர்களுக்கு சமர்ப்பித்தனர். ஆசிரியர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிகளை இணை பேராசிரியர் மற்றும் செவிலியர் சங்க ஒருங்கிணைப்பாளர் சுமதி ஆலோசனைப்படி 4-ம் ஆண்டு மாணவிகள் சங்கீதா, ஆஷ்மி ஆகியோர் தொகுத்து வழங்கினர். 4-ம் ஆண்டு சிங்கப்பிரியா நன்றி கூறினார்.


Next Story