வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
தஞ்சை வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் சாலையில் உள்ளது வரதராஜபெருமாள் கோவில். இங்கு பெருமா ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி காலை 7 மணிக்கு திருமஞ்சனமும், அதனைத்தொடர்ந்து மங்கள இசையும் நடைபெற்றது. பின்னர் பாம்பாட்டித்தெருவில் உள்ள சிந்தாமணி விநாயகர் கோவிலில் இருந்து சீர்வரிசை எடுத்துவரப்பட்டது.பின்னர் வரதராஜ பெருமாள் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி அம்மாள்களுக்கு மாலை சாற்றுதல் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. மற்றும் ஊஞ்சல் உற்சவமும், அதனைத்தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. திருமண வைபவத்தை ஆலயஅர்ச்சகர் கிருஷ்ணமூர்த்தி நடத்தி வைத்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம், திருமண விருந்து வழங்கப்பட்டது. மாலையில் சாமி புறப்பாடு மற்றும்வீதி உலா நடைபெற்றது. முடிவில் இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.