பொங்கலை முன்னிட்டு களைகட்டிய திருமங்கலம் ஆட்டுச்சந்தை - ரூ.3 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை என தகவல்


பொங்கலை முன்னிட்டு களைகட்டிய திருமங்கலம் ஆட்டுச்சந்தை - ரூ.3 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை என தகவல்
x

திருமங்கலம் ஆட்டுச்சந்தையில் ஆட்டின் விலை சுமார் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை விற்கப்பட்டது.

மதுரை,

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஒவ்வொரு வாரமும் ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். தமிழ்நாட்டில் பொள்ளாச்சிக்கு அடுத்ததாக பெரிய சந்தையாக கருதப்படும் இந்த ஆட்டுச்சந்தையில் ஒவ்வொரு வாரமும் 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ஆடுகள் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தென் மாவட்டங்களான விருதுநகர், ராமநாதபுரம், கோவில்பட்டி, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இந்த சந்தைக்கு வியாபாரிகள் வருகை தருகின்றனர். சந்தை நடைபெறும் நாட்களில் அதிகாலை 4 மணி முதல் காலை 9 மணி வரை கட்டுக்கடங்காத கூட்டம் காணப்படும்.

இந்த நிலையில் பொங்கல் பண்டிகயை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணியளவில் தொடங்கிய ஆட்டுச்சந்தையில், வழக்கத்தை விட அதிக அளவிலான கூட்டம் காணப்பட்டது. பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் சூழலில், இன்று திருமங்கலம் ஆட்டுச்சந்தையில் ஆட்டின் விலை சுமார் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை விற்கப்பட்டது.

இன்று நடைபெற்ற வியாபாரத்தில் மொத்தம் ரூ.3 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் கட்டுக்கடங்காத கூட்டத்தால் இடநெருக்கடி ஏற்படுவதாகவும் நகராட்சி நிர்வாகம் ஆட்டுச்சந்தையை விரிவுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Next Story