திருப்பரங்குன்றம், சோழவந்தானில்அ.தி.மு.க. 52-வது ஆண்டு தொடக்க விழா


திருப்பரங்குன்றம், சோழவந்தானில்அ.தி.மு.க. 52-வது ஆண்டு தொடக்க விழா
x

திருப்பரங்குன்றம், சோழவந்தானில் அ.தி.மு.க. 52-வது ஆண்டு தொடக்க விழா நடந்தது.

மதுரை

திருப்பரங்குன்றம்,

திருப்பரங்குன்றத்தில் மதுரை புறநகர் அ.தி.மு.க. கிழக்கு மாவட்ட சார்பில் அ.தி.மு.க. 52-வது ஆண்டு விழா நடைபெற்றது. மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட இளைஞரணி மாவட்ட செயலாளரும், திருப்பரங்குன்றம் பகுதி செயலாளருமான வக்கீல் ரமேஷ் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன் முன்னிலை வகித்தார். அமைப்புச் செயலாளரும், மதுரை கிழக்கு மாவட்ட செயலாளருமான ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவப்படத்திற்கு மாலை அணிவித்தார். மேலும் அ.தி.மு.க. கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கினார். நிகழ்ச்சியில் பெரியபுள்ளான் எம்.எல்.ஏ., பகுதி செயலாளர் பன்னீர் செல்வம், வட்ட செயலாளர்கள் பொன்.முருகன், எம்.ஆர்.குமார், பாலா, திருநகர் பாலமுருகன், நாகரத்தினம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சோழவந்தானில் அ.தி.மு.க. 52-வது ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டம் நடந்தது. முன்னாள் சேர்மன் முருகேசன் தலைமை தாங்கினார். படக்கடை முருகேசன், நகரச்செயலாளர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர இளைஞரணி அமைப்பாளர் கேபிள்மணி வரவேற்றார். தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். ஊத்துக்குளி சேதுகண்ணன் இனிப்பு வழங்கினார். பொதுக்குழு உறுப்பினர் நாகராஜன், கவுன்சிலர் அகிலாஜெயக்குமார், ஒன்றிய தலைவர் மகாலட்சுமிராஜேஷ்கண்ணா, நிர்வாகிகள் சோலைகண்ணன், ஜெயபிரகாஷ், மருத்துவர் அணி கருப்பையா ஆகியோர் பேசினர். நகர துணைச்செயலாளர் தியாகு நன்றி கூறினார்

1 More update

Next Story