திருப்பாதிரிப்புலியூர் கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் தெப்பம் அமைத்து சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் தரிசனம்


திருப்பாதிரிப்புலியூர் கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் தெப்பம் அமைத்து சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் தரிசனம்
x

திருப்பாதிரிப்புலியூர் கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் தெப்பம் அமைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

கடலூர்

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் சங்கரநாயுடு தெருவில் கன்னிகா பரமேஸ்வரி கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று தை கடைசி வெள்ளியை முன்னிட்டு அஸ்வ பூஜை நடந்தது. இதையொட்டி அம்மனுக்கு காலை 8 மணிக்கு மகா அபிஷேகம் அலங்காரம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மாலை 6.30 மணி அளவில் அஸ்வ பூஜை தொடங்கியது. இதில் குதிரை பொம்மை வைத்து ஹயக்கிரீவ அஷ்டோத்திரம் காயத்திரி பாராயணம் செய்து பூஜை நடந்தது. பொதுமக்களும் பொம்மை குதிரைகளை கொண்டு வந்து பூஜை செய்தனர். அதன்பிறகு மூலவர் சன்னதியில் தெப்பம் அமைத்து, தாமரை பூக்கள் வைத்து அம்மனுக்கு அலங்காரம் நடந்தது. இரவு 8.30 மணியளவில் தீபாராதனை, சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கப்பட்டது.


Next Story