திருப்புவனம் யூனியன் கூட்டம்
திருப்புவனம் யூனியன் கூட்டம்
திருப்புவனம்
திருப்புவனம் யூனியன் சாதாரண கூட்டம் அதன் தலைவர் சின்னையா தலைமையில் நடைபெற்றது. துணை தலைவர் மூர்த்தி முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜோதிநாதன், ராஜசேகரன் ஆகியோர் வரவேற்றனர். மன்ற பொருட்கள் குறித்த தீர்மானங்களை மேலாளர் அருணாதேவி வாசித்தார். கூட்டத்தில் ஒன்றிய குழு உறுப்பினர் ஈஸ்வரன் பேசும்போது, ஒன்றிய குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் குறைந்த விலையில் நான்கு சக்கர வாகனம் வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.
துணை தலைவர் மூர்த்தி பேசும்போது, அனைத்து அரசு துறை அலுவலர்களுக்கும் கூட்டத்தில் பங்கேற்க முறையாக தபால் அனுப்பப்பட்டுள்ளது. ஒரு சில அலுவலர்களைத் தவிர பிற அலுவலர்கள் வருவதில்லை.
இதனால் மக்கள் குறைகள் குறித்து பேச முடியவில்லை என்றார். தலைவர் சின்னையா பேசும்போது, அடுத்த முறை நடைபெறும் கூட்டத்திற்கு அனைத்து அரசுத் துறை அலுவலர்களும் கலந்து கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தார். கூட்டத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரிகள், மின்சாரத்துறையினர் உள்பட பல்வேறு அரசுத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.