திருப்பூர்: பள்ளிமாணவனை போதையில் சரமாரியாக தாக்கிய கும்பல்
பள்ளி மாணவனை போதையில் தாக்கிய கும்பலை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே அரசு பள்ளி மாணவனை போதையில் தாக்கிய கும்பலை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
முத்தூர் செங்கோடம்பாளையத்தை சேர்ந்த ராஜன் மகன் இளங்கோ, அரசு மேல் நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், நேற்று பள்ளி முடிந்து வீடு திரும்பிய இளங்கோவை, அதே பகுதியைச் சேர்ந்த கலையரசன், பசுபதி உள்ளிட்ட 6 பேர் கொண்ட கும்பல் சராமரியாக தாக்கியுள்ளனர்.
இதை கண்ட அப்பகுதி பொதுமக்கள், அந்த கும்பலைச் சேர்ந்த 3 பேரை சுற்றி வளைத்து பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
Related Tags :
Next Story