திருப்பூர்: அரசு பள்ளிக்கு மேள தாளத்துடன் சீர்வரிசை அளித்த கிராம மக்கள்


திருப்பூர்: அரசு பள்ளிக்கு மேள தாளத்துடன் சீர்வரிசை அளித்த கிராம மக்கள்
x

பள்ளிக்கு தேவையான பொருட்களை கிராம மக்கள் சீர்வரிசையாக அளித்தனர்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சேடபாளையம் அரசு நடுநிலைக்குத் தேவையான நாற்காலிகள், காகிதங்கள், குப்பைத் தொட்டிகள் உள்ளிட்ட பொருட்களை அங்குள்ள கிராம மக்கள் சீர்வரிசையாக அளித்தனர்.

பட்டாசு, மேளதாளத்துடன் சீர்வரிசை பொருட்களை எடுத்துச் செல்வதைப் போல வெற்றிலைப் பாக்கு, பழங்களோடு தாம்பூலத் தட்டுகளை ஏந்திக் கொண்டு பெண்கள் ஊர்வலமாக முன்செல்ல, அவர்களுக்குப் பின்னால் வாகனங்களில் எடுத்து வரப்பட்ட பொருட்கள் பள்ளி நிர்வாகத்திடம் ஒப்படைக்கட்டன.



Next Story