திருத்தணி முருகன் கோவில் உண்டியல் வசூல் ரூ.2 கோடியே 18 லட்சம்


திருத்தணி முருகன் கோவில் உண்டியல் வசூல் ரூ.2 கோடியே 18 லட்சம்
x
திருவள்ளூர்

திருத்தணி,

திருத்தணி முருகன் கோவில் முருக பெருமானின் புகழ் பெற்ற 5-ம் படை திருத்தலமாகும். இந்த கோவிலில் கடந்த 7-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை ஆடி கிருத்திகை திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பக்தர்கள் செலுத்திய காணிக்கையை எண்ணுவதற்கு தமிழக இந்து அறநிலையத்துறை ஆணையரிடம் அனுமதி பெற்று திருத்தணி முருகன் கோவில் நிர்வாகம் மலைக்கோவில் தேவர் மண்டபத்தில் கோவில் இணை ஆணையார், செயல் அலுவலர் விஜயா, அறங்காவலர் குழு தலைவர் ஸ்ரீதரன், அறங்காவலர்கள் உஷா, நாகன், சுரேஷ்பாபு, மோகனன் ஆகியோர் முன்னிலையில் கோவில் பணியாளர்களை கொண்டு காணிக்கை எண்ணும் பணி நடந்தது.

இதில் 11 நாள் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.2 கோடியே 17 லட்சத்து 97 ஆயிரத்து 512 கிடைத்தது. மேலும் தங்கம் 345 கிராம், வெள்ளி 13 கிலோ 12 கிராம் காணிக்கையாக செலுத்தப்பட்டிருப்பதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story