திருவண்ணாமலை மாவட்டம் இந்திய அளவில் 2-ம் இடம் பிடித்து சாதனை


திருவண்ணாமலை மாவட்டம் இந்திய அளவில் 2-ம் இடம் பிடித்து சாதனை
x

ஜல் ஜீவன் இயக்க திட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டம் இந்திய அளவில் 2-ம் இடம் பிடித்து சாதனை படைத்தற்காக மத்திய அரசால் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

திருவண்ணாமலை

மத்திய மற்றும் மாநில அரசு பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் ஜல் ஜீவன் இயக்க திட்டத்தின் மூலம் திருவண்ணாமலை மாவட்டத்தில் 5 லட்சத்து 31 ஆயிரத்து 110 ஊரக பகுதி குடியிருப்புகளில் 4 லட்சத்து 70 ஆயிரத்து 670 குடியிருப்புகளுக்கு கடந்த ஜூன் மாதம் 30-ந் தேதி வரை தனிநபர் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது.

கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 1-ந் தேதி முதல் 2023-ம் ஜூன் மாதம் 30-ந் தேதி வரையிலான கால கட்டத்தில் இந்திய அளவில் சாதனையாளர்கள் பிரிவில் 89.51 சதவீதம் முன்னேற்றம் எய்தி 168 மாவட்டங்களில் திருவண்ணாமலை மாவட்டம் 2-வது இடம் பிடித்து சாதனை படைத்து உள்ளது.

இந்த சாதனையை பாராட்டும் வகையில் மத்திய அரசால் ஜல் ஜீவன் சர்வக்ஷான் -2023-க்கான பாராட்டு சான்றிதழ் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ரிஷப் ஆகியோருக்கு வழங்கப்பட்டு உள்ளது.


Related Tags :
Next Story