திருவாரூர்: சாலையில் சென்ற காரில் திடீர் தீ - நூலிழையில் உயிர்தப்பிய 6 பேர்


திருவாரூர்: சாலையில் சென்ற காரில் திடீர் தீ - நூலிழையில் உயிர்தப்பிய 6 பேர்
x

காரின் முன்பகுதியில் புகை வந்ததைக் கண்டு சுதாரித்துக் கொண்டு, காரில் இருந்த 6 பேரும் உடனடியாக காரை நிறுத்தி கீழே இறங்கியுள்ளனர்.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே பின்னத்தூர் பகுதியில், சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த காரில் காயல்பட்டிணத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் நாகூர் கந்தூரி விழாவிற்கு சென்றுவிட்டு, தூத்துக்குடிக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில் நள்ளிரவில் பின்னத்தூர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது காரில் திடீரென தீப்பிடித்தது. காரின் முன்பகுதியில் புகை வந்ததைக் கண்டு சுதாரித்துக் கொண்டு, காரில் இருந்த 6 பேரும் உடனடியாக காரை நிறுத்தி கீழே இறங்கியுள்ளனர்.

பின்னர் சில வினாடிகளில் கார் முழுவதும் மளமளவென தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதனால் 6 பேரும் நூலிழையில் உயிர் தப்பினர். இதையடுத்து இது குறித்து தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து காரில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். மேலும் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story