இறந்தும் ஒருவரை வாழ வைக்கும் திருவாரூர் இளைஞர்...!

திருவாரூர் அருகே சாலை விபத்தில் ஐயப்பன் என்பவர் உயிரிழந்துள்ளார். இவரின் உடல் உறுப்புகள் வடமாநில வாலிபர் ஒருவருக்கு பொருத்தப்பட உள்ளது.
திருவாரூர்,
திருவாரூர் அருகே சாலை விபத்தில் ஐயப்பன்(வயது35) என்பவர் உயிரிழந்துள்ளார். இவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து ஐயப்பனின் இதயம், நுரையீரல் போன்ற உறுப்புகளை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் எடுத்தனர். இந்த உறுப்புகள் சென்னை அருகம்பாக்கம் தனியார் மருத்துவமனைக்கு 4 மணி நேரத்தில் கொண்டு செல்லப்பட்டது.
அங்கு சிகிச்சை பெற்று வரும் வடமாநில இளைஞருக்கு இந்த உறுப்புகள் பொருத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Related Tags :
Next Story