திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோவிலில் காணிக்கை முடி ரூ.52 லட்சத்திற்கு ஏலம்


திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோவிலில் காணிக்கை முடி ரூ.52 லட்சத்திற்கு ஏலம்
x

திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோவிலில் காணிக்கை முடி ரூ.52 லட்சத்திற்கு ஏலம் போனது

ராமநாதபுரம்

தொண்டி,

திருவாடானை தாலுகா திருவெற்றியூர் பாகம்பிரியாள் சமேத வல்மீக நாதசுவாமி கோவிலில் காணிக்கை பொருட்கள் ஏலம் நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பழனிக்குமார் தலைமை வகித்தார். இதில் முடி காணிக்கை உரிமம் ரூ.52.13 லட்சத்திற்கும், உபய கோழி, சேவல் உரிமம் ரூ.23.54 லட்சத்திற்கும் ஏலம் போனது. இதில் தேவஸ்தான மேலாளர் இளங்கோ, அறநிலையத்துறை ஆய்வாளர் சண்முகசுந்தரம், சரக கண்காணிப்பாளர் செந்தில்குமார், கவுரவ கண்காணிப்பாளர் சுந்தரராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story