த.மா.கா. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
தூத்துக்குடி தெற்கு மாவட்ட த.மா.கா. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி
தூத்துக்குடி தெற்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன் தலைமை தாங்கினார். கீரனூர் முருகேசன், தங்கத்தாய் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில். தூத்துக்குடியில் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும். தூத்துக்குடி-திருச்செந்தூர் பாலத்தில் சிக்னல் அமைக்க வேண்டும். புதுக்கோட்டை பாலத்தை விரைந்து முடிக்க வேண்டும். வீட்டுவரி, மின்சார கட்டணம், பால்விலை உயர்வை குறைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Related Tags :
Next Story