தே.மு.தி.க. புதிய நிர்வாகிகள் நியமனம்


தே.மு.தி.க. புதிய நிர்வாகிகள் நியமனம்
x
திருப்பூர்


தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் அமைப்பு தேர்தல் கடந்த ஆண்டு (2022)ஜூலை மாதம் தொடங்கி அக்டோபர் மாதம் வரை நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும் புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டனர். இதன்படி திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளராக பி.ஆர்.குழந்தைவேல் நியமனம் செய்யப்பட்டார். தற்போது திருப்பூர் மாநகர் மாவட்டத்திற்குட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர், பகுதி, வட்ட புதிய நிர்வாகிகளும் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதன்படி மாநகர் மாவட்ட அவைத்தலைவராக ஆர்.பி.சரவணக்குமார், மாவட்ட பொருளாளராக பொட்டு எஸ்.காளியப்பன், மாவட்ட துணை செயலாளர்களாக ராயபுரம் பி.ஆனந்த், வெள்ளியங்கிரி, பிரபு, சசிகலா கணேஷ், செயற்குழு உறுப்பினராக கண்ணன், பொதுக்குழு உறுப்பினராக பாலா, மண்ணரை பகுதி செயலாளராக மோகன்ராஜ், கருவம்பாளையம் பகுதி செயலாளராக தேவேந்திரன் உள்பட பலர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். புதிய நிர்வாகிகள் கொங்கு மெயின் ரோட்டில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாநகர் மாவட்ட செயலாளர் பி.ஆர்.குழந்தைவேலை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது குழந்தைவேல் புதிதாக பொறுப்பேற்றுள்ள நிர்வாகிகளிடம் புதிய உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்ட கட்சி வளர்ச்சிப் பணிகள் மற்றும் மக்களுக்கான பணிகளை சிறப்பாக செய்யுமாறு கூறி வாழ்த்து தெரிவித்தார்.


Next Story