தமிழ்நாட்டில் இன்று 3 பேருக்கு கொரோனா பாதிப்பு
தமிழ்நாட்டில் இன்று 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு ஏற்ற, இறக்கமாக பதிவாகி வருகிறது. அந்த வகையில் இன்று 3 பேர் கொரோனாவால் பாதிப்பட்டனர். இதில், வங்காளதேசத்தில் இருந்து வந்த ஒருவருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. இதுபோக, தேனி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தலா ஒருவர் பாதிக்கப்பட்டனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் ஒரு ஆண், 2 பெண்கள் ஆடங்குவர். கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 3 பேர் குணமடைந்தனர் வீடு திரும்பினர். 36 மாவட்டங்களில் பாதிப்பு ஏற்படவில்லை. இதேபோல, சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 31-ஆக உள்ளது. இன்று தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. மேற்கண்ட தகவல் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story