குரூப்-2 பணிக்கான தேர்வை டி.என்.பி.எஸ்.சி. அறிவிக்க வேண்டும்; டாக்டர் ராமதாஸ் டுவிட்டர் பதிவு
குரூப்-2 பணிக்கான தேர்வை டி.என்.பி.எஸ்.சி. அறிவிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
துணை கலெக்டர் பணிக்கான குரூப்-1 தேர்வு வருகிற ஆகஸ்டு மாதம் அறிவிக்கப்படும் என்றும், நவம்பர் மாதம் முதல் நிலை தேர்வும், 2024-ம் ஆண்டு ஜூலையில் முதன்மை தேர்வும் நடத்தப்படும் என டி.என்.பி.எஸ்.சி அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.
முதல்நிலை தேர்வுக்கும், முதன்மை தேர்வுக்கும் இடையே 9 மாத இடைவெளி என்பது மிக அதிகம். இதை குறைக்க வேண்டும். இந்த பணிகளுக்கு ஆண்டுக்கு ஒருமுறை தேர்வு நடத்தப்படுவதை டி.என்.பி.எஸ்.சி உறுதி செய்ய வேண்டும்.
குரூப்-2, குரூப்-3 பணிக்கான தேர்வை அறிவிக்க வேண்டும். அனைத்து துறைகளிலும் 4 லட்சத்திற்கும் கூடுதலான காலியிடங்கள் உள்ள நிலையில், அவற்றை அடுத்த 3 ஆண்டுகளில் 4 தவணைகளில் நிரப்புவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.