டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு எழுத அனுமதி மறுப்பு


டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு எழுத அனுமதி மறுப்பு
x

பெண்ணாடத்தில் தாமதமாக வந்ததால் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்ட தேர்வர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கடலூர்

பெண்ணாடம்,

குரூப்-4 தேர்வு

தமிழகத்தில் நேற்று டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு நடைபெற்றது. இதில் தேர்வு மையத்துக்கு காலை 8.30 மணியில் இருந்து 9 மணிக்குள் வர வேண்டும் என்று தேர்வர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

ஆனால், கடலூர் மாவட்டத்தில் பெரும்பாலான மையங்களில் சில தேர்வர்கள் தாமதமாக வந்தனர். அவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை.

அனுமதி மறுப்பு

அந்த வகையில் பெண்ணாடம் கிழக்கு வால்பட்டம் அருகே உள்ள தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த தேர்வு மையத்தில் தேர்வு எழுத இருந்த தேர்வர்கள் காலை 8.30 மணி முதல் வர தொடங்கினர்.அப்போது, 9.05 மணிக்கு அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 2 கர்ப்பிணிகள் உள்பட 11 பேர் தேர்வு எழுத வந்தனர். அவர்கள் தாமதமாக வந்ததாக கூறி போலீசார் மற்றும் அதிகாரிகள் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கவில்லை. அப்போது தேர்வர்கள், பக்கத்து மாவட்டத்தில் இருந்து வருவதாகவும், குறிப்பிட்ட நேரத்தில் பஸ் வசதி இல்லாததால் தாமதமாகி விட்டதாகவும் கூறினர். ஆனால் தேர்வர்களின் காரணத்தை அதிகாரிகள் ஏற்றுக்கொள்ளவில்லை.

சாலை மறியல்

இதனால், கண்ணீர் விட்டு அழுதபடி தேர்வர்கள், திட்டக்குடி - விருத்தாசலம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் பெண்ணாடம் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, கலைந்துபோக செய்தனர். இதனால் அவர்கள் தேர்வு எழுதாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். தேர்வர்களின் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


Next Story